Thursday, 14th December 2017

14225390_1784549105091917_3162632115744413100_n_Fotor_Collage_5f1a4.jpg

 

புலம்பெயர்ந்து இத்தாலி தேசத்தில் வசிக்கும் கவிஞர் அல்லையூர் சி விஜயன் எழுதிய 'என் பின்னால் ஒரு நிழல்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 02.0.2016 வெள்ளிக்கிழமை மாலை 03.25 மணிக்கு, வவுனியா நகர் குடியிருப்பு பூங்காவில் இடம்பெற்றது.

வள்ளுவர் புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியீடாக உலாவந்த இந்த கவிநூலின் வெளியீட்டு விழாவிற்கு 'தமிழ் விருட்சம்' தொண்டமைப்பின் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் தாங்கினார்.

சுடர்கள் ஏற்றப்பட்தைத் தொடர்ந்து, தமிழ் மொழி வாழ்த்தினை மாணவி நிரோஜினி இசைத்தார் வரவேற்பு நடனத்தினை மாணவிகள் ரோசித்தா மற்றும் பிரம்மியா ஆகியோர் வழங்கினர். வரவேற்பு உரையினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பத்மாவதி ஜெயச்சந்திரன் வழங்கினார். ஆசியுரைகளை வவுனியா மாவட்ட அந்தனர் ஒன்றியச் செயலாளர் பிரம்மசிறீ பிரபாகரக் குருக்கள் மற்றும் அருட்பணி அடிகளார் ஆகியோர் வழங்கினர்.

நூலாசிரியர் மற்றும் நூல் அறிமுக உரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ புரட்சி வழங்கி வெளியீட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்தார். பிரதிகள் வழங்கப்பட்ட பின்னர் பிரதம விருந்தினர் உரையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் நிகழ்த்தினார். நூலின் ஆய்வுரையினை வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் வாசன் நிகழ்த்தினார். வாழ்த்துரைகளை தமிழ்மணி மேழிக்குமரன் மற்றும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் .பார்த்தீபன் ஆகியோர் வழங்கினர்.

நூலாசிரியருக்கான கெளரவிப்பினை விஜய் பதிப்பகம் உரிமையாளர் எஸ்.விஜய் மற்றும் தமிழ் விருட்சம் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து 'இக்கால மனிதர்கள் வாழ்வதற்கு' எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. கவிஞர் மாணிக்கம் ஜெகன் தலைமையிலான இக்கவியரங்கில் கவிஞர்களான, கவிச்சுடர் சிவரமணி, ஜோ.ராஜ்குமார், வவுனியா மிதிலைமாறன், குடத்தனையூரான் சிவா, ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் வாழ்த்துக் கவியினை காக்கேயன்குளம் உசேன் வழங்கினார். தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் கவிஞர் அல்லையூர் சி விஜயன் நிகழ்த்தினார்.

தமிழ் விருட்சம் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு விழாவிற்கான ஊடக அனுசரனையினை தமிழருவி வானொலி வழங்கியிருந்தது. அழகிய வடிவமைப்போடும், தகுதிமிகு கவிதைகளோடும் 'என் பின்னால் ஒரு நிழல்' கவிநூலும் தமிழுலகில் சேர்ந்து கொண்டது.

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.