Monday, 20th November 2017
Breaking News

“விக்கிரமனின் பதிலைக் கேட்டு சற்றும் எதிர்பாராத வகையில் வேதாளம் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பப் போய் முருக்க மரத்தில் ஏறியது..”


காலங்காலமாக ஒற்றையாட்சி என்கின்ற முருக்க மரத்தில் ஏறும் சிங்கள அரசியல் தலைவர்களான வேதாளங்கள் வரிசையில் திரு ரணில் விக்கிரமசிங்கவும் இப்பொழுது சேர்ந்து விட்டார். சென்ற வாரம் நாடாளுமன்றில் பிரதம மந்திரியாகத் தனது கன்னி உரையை நிகழ்த்தும்போதே இதனைத் தெரிவித்திருந்தார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பினைக் குழப்பா வண்ணம் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் எனக் கூறினார். அதாவது, 13ந் திருத்தச் சட்டமே அவ்வாறான வகையில்தான் செயற்படுத்தப்படும் என்று கூறுகின்றார். ஆயினும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக உள்ளதாகவும் அதற்கான ஒத்துழைப்பினை வேண்டி நிற்பதாகவும் தெரிவித்தார். 13ந்திருத்தச் சட்டமே ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்தான் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கூட  ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனருக்கு இரண்டாம் பட்சமே. இந்த லட்சணத்தில், அதுவும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பினைக் குழப்பா வண்ணம் செயற்படுத்தப்படும் என்று சொல்லவும் வேண்டுமா? ஆனால் ரணில் சொல்லி விட்டார். ஒற்iறையாட்சிக்குள்ளேயே தீர்வு எனப் பிரகடனம் பண்ணிவிட்டு வாருங்கள் பேசலாம் என்றால் எதனைத்தான் பேசுவது?


2002ம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவர் இந்த ரணில். அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,  “இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பூர்வீகப்பிர தேசங்களில் உள்ளக சுயநிர்ணயக் கொள்கையிலிருந்து எழும் ஒருங்கிணைந்த இலங்கையிலான சம~;டி அரசுக் கட்டமைப்புத் தீர்வொன்றினை ஆராய்வதாக இரு சாராரும் ஒத்துக்;கொண்டனர்” என்பதாகும் (“explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka”).   அந்த நேரத்தில் அவ்வாறு ஒத்துக்கொண்டு விட்டு இன்று மட்ராஸ் பாஸையில் கூறுவதானால் ‘அசால்ட்டாக’ ஒற்றையாட்சிதான் எனப் பகிரங்கமாகத் தெரிவிப்பது தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் தோற்று பலவீனமான நிpலையில் இருப்பதனால்தான் என்றே நாம் கருத வேண்டியிருக்கின்றது. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பும் உரத்து தனது சமஸ்டிப் பாட்டைப் பாடக் காணோமே. ஒருங்கிணைந்த இலங்கையில்தான் (united Sri Lanka) நாம் எமது தீர்வினை நாடுகின்றோம் எனக் கூறி வந்த சம்பந்தர், ரணிலின் பேச்சைக் கேடட்ட மாத்திரத்தே அடே இது எமது கொள்கையல்லவே என இதுவரை அறிக்;கை விடவில்லையே. அப்போ நாங்கள் துப்பாக்கியைத் தூக்;கினால்தான் நீங்கள் திரும்ப சமஸ்டிக் கோரிக்கையைக் கருத ஆரம்பிப்பீர்களோ எனக் கேட்கவில்லையே. இது கிட்டத்தட்ட சென்ற ஆட்சியில் திரு டக்ளஸ் தேவானந்தாவின் நிலை மாதிரி ஆகிவிட்டது. அவர் ஒருபுறம் 13 பிளஸ் என்று கூறிக்கொண்டு திரிய முன்னைய அரசாங்கம் 13 மைனஸ் மைனஸ் என்று சொன்னதல்லவா?


இந்த அரசாங்கம் ஆட்சி பீடத்தில் ஏறிய நாள்முதல், அது தென்னிலங்கையில் முகம் கொடுக்கும் சவால்களை உணர்ந்து திரு சம்பந்தன் அவர்கள் மிக நிதானமாகத்தான் நடந்து கொண்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். அது தேவையானதும் கூட. உதாரணமாக, வடக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பதில் நாம் அவசரப் படத்தேவையில்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பில் ஓர் அரசியல் முதிர்ச்சியை நாம் காண்கின்றோம். ஆயினும், அரசியல் நிதானத்தைக் காண்பிப்பதற்கும் அடிப்படைக் கொள்iகைகளை விட்டுக் கொடுக்கின்றோம் என சொல்வதற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கின்றது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக அரசியலை நகர்த்துகின்றோம் என்று போய் கோட்டின் மறு பக்கத்தில் மீள முடியாதவாறு நாம் விழ முடியாது.  எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படைகளை வலியுறுத்திக் கொண்டு வருவது முக்கியமாகும். ஆனால் அதனைக் கூட்டமைப்பு செய்கின்றது என்பதற்கு எமக்கு ஆதாரங்கள் ஒன்றுமே இல்லை.  


2013ம் ஆண்டு  இப்போதைய ஆட்சியாளர்களுக்கும் தமிழ் தலைமைத்துவங்களுக்கும் இடையே சிங்கப்பூரில் ஒரு சந்திப்பு இடம் பெற்றதாக இப்பொழுது செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தென்னாபிரிக்கா ஏற்பாடு செய்த இச்சந்திப்பில் இப்போதைய 100 நாள் அரசியல் திட்டத்தின் ஆரம்ப கர்த்தாவாக, சந்திரிகாவையும் ரணிலையும் மைத்ரியையும் சேர்ப்பதற்கு பின்னின்று உழைத்தவரான ஜயம்பதி விக்ரமரட்ணவும் மங்கள சமரவீரவும் கலந்து கொண்டிருந்திருக்கின்றனர். தமிழ்த் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும்  பேராசிரியர் வி.ரி தமிழ்மாறனும் கலந்து கொண்டதாகக் கேள்வி. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவினைப் பெற்றுக்கொள்வதே சிங்களத் தரப்பினரின் நோக்கமாக இருந்திருக்கின்றது. அங்கு பத்துக் கொள்கைகளின் அடிப்படையில் தமிழரின் ஆதரவினை நாடியிருக்கின்றனர். எமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எப்படி லேபிள் ஒட்டுகின்றோம் என்பது முக்கியமல்ல அதன் உள்ளடக்கம்தான் முக்கியம் என்பது இந்த ஒத்துழைப்பின் முதலாவது கொள்கையாகும். அதே போன்று, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தினைக் கொண்டு வருதல், அடிப்படை உரிமைகள் பற்றிய உறுதியான சட்டங்களைக்கொண்டு வருதல், சகல இன மக்களின் அபிலாi~களையும் அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரித்தல் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன. இந்த ஆவணத்தில் மூன்றாவது கொள்கையாக பிரிக்கப்படாத இலங்கைக்குள் மத்தியில் கூட்டாட்சியும் மாகாணத்தில் சுயாட்சியும் என்கின்ற கோட்பாடு அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றதெனினும் சுயாட்சி எந்த வகையினது என்பது குறிப்பிடப்படவில்லை. உயர் பதவிகள் சகல இனங்களையும்; உள்ளடக்கியதாய் இருக்கும் என்றும் அரச நிறுவனங்கள் நாட்டின் பல்லினத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்றும் குறிpப்பிடப்பட்டிருக்கின்றது. கடைசியில், மதச் சார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அங்கு பௌத்த மதத்துக்கு  முதல் நிலை வழங்கும் அதே சமயத்தில் ஏனைய மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலோட்டமாகப் பார்த்தால், நல்லாட்சிக்குத் தேவையான முக்கிய அம்சங்களை இந்த சிங்கப்பூர் ஆவணம் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் எழுந்தமானமான முறையில் இதனை அங்கீகரித்தல் அதன் பல தாற்பரியங்களை வெளிக்கொணராது விடுகின்றது. அரச நிறுவனங்கள் நாட்டின் பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும் என்கின்ற ஒரு விடயத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். தமிழர்கள் அரச நிர்வாகத்தில் உள்வாங்கப்படுதலில் பல கட்டமைப்பு சார்பான பிரச்சினைகள் உள்ளன. மொழிப்பிரச்சினைகள், பிரவேசப் பரீட்சைகள் நடத்தப்படும் முறைகள் என ஏராளம். இன்றும் சட்டக் கல்லூரியில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை இவைபோன்ற பல பிரச்சினைகளினால் குறைவாகவே இருக்கின்றது. கீழே நுழைந்தால்தானே மேலே வரமுடியும்? அதே போன்று தேசியக் கல்வி நிறுவகத்திலும் இதே பிரச்சினை. தமிழ் மொழியில் பணி செய்யக்கூடிய தமிழ் அதிகாரிகள் அங்கு இல்லை. இது பெண்களின் நிலைமை மாதிரி. அவர்கள் அரசியலில் பங்கு கொள்ள சகல உரிமைகளும் இருக்கின்றன, அவர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் மேடைக்கு மேடை முழங்குகின்றனர், ஆனால் பெண்களுக்கோ அரசியலில் நுழைவதற்கான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்கள் ஏராளம். எனவே அரசியலில் பெண்கள் இன்றியே எங்கள் அரசியல் ஓடிக்கொண்டுதானிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு இவ்வகையான கட்டமைப்பு ரீதியான முட்டுக்கட்டைகளைத் தவிர்க்கவே பூரணமான அதிகாரப் பரவலாக்கல் அவசியமாகின்றது. அத்துடன், ஒருபுறம் மதச்சார்பற்ற அரசு என்கின்றனர், மறுபுறமோ பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்கின்றனர். இதுவும் காலங்காலமாக ஒரு கையால் கொடுத்து மற்றக்கையால் வாங்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவத்தின் யுக்தி என்பதாகவே கொள்ள வேண்டும். இந்த சந்திப்பில்கூட, தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற கட்டமைப்பு ரீதியிலான தடைகளை நிரற்படுத்தியும் அவர்கள் வேண்டுகின்ற சுயாட்சியின் உருவத்தினை விபரித்தும் தமிழ்த் தரப்பினர் தமது கருத்துக்களை முன்வைக்கத் தவறி விட்டனர் என்றே தோன்றுகின்றது. இதே போன்றுதான் சுதந்ததிரமான நீதித்துறை என்னும் விடயத்தையும் நாம் நோக்கலாம். சுதந்திரமாய் இயங்கும் நீதித்துறை சிங்கள மேலாதிக்கச் சிந்தனைகளில் ஊறியுள்;ள நீதிமான்களினால் நடத்தப்படுமாகில் அங்கு தமிழ் மக்களுக்கு நீதி ஏது?


இருந்தாலும் ஒன்றும் கெட்டு விடவில்லை. சென்ற வாரம் இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அங்கு வேறு பாட்டுப் பாடியிருக்கின்றார். அரசியல் முனைப்பு இல்லாததால்தான் இதுவரைகாலமும் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெறப்படவில்லை என ஒத்துக்;கொண்டிருக்கின்றார்.  இராணுவக் குறைப்பு, ஐ.நாவின் உதவியுடனான போர்க்குற்றத்தைப் பற்றிய உள்ளுர் விசாரணைகள், திம்பு முதல் சந்திரிகா வரையிலான இனப்பிரச்சினைக்கான தீர்வுகளின் முன்மொழிவுகள் என இம்மூன்றினது அடிப்படையிலுமே மீளிணக்கத்தினை தமது அரசாங்கம் கட்டியெழுப்பத் தயாராகவுள்ளது என்று ஊடகங்களுடனான பேட்டிகளில் அவர் கூறியிருக்கின்றார். திம்பு பேச்சுவார்த்தைகள் தமிழர்களின் பாரம்;பரிய பூமியில் சுயநிர்ணய உரிமை எனக் கூறுகின்றது. சந்திரிகாவின் அரசியலமைப்புச் சட்ட முன்மொழிவோ ஒருங்கிணைந்த சமஸ்டி அரசினை முன்வைக்கின்றது. 13ம் திருத்தச் சட்டத்;துடன் இந்;திய அரசாங்கம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்க, என்ன அழுத்தத்தில் இந்த அறிக்கையினை அவர் வெளியிடவேண்டிய வந்திருக்கின்றது என்பது மட்டும் இன்னும் தெளிவாகவில்லை. எம்மைப் பொறுத்த மட்டில் ஒரே அரசாங்கத்தில் பிரதம மந்திரி ஒன்று சொல்ல அதன் வெளியுறவு அமைச்சர் இன்னொன்று கூறுகின்றாரே என நாம் கலங்கத் தேவையில்லை. மங்கள சமரவீரவின் அறிக்கையினை வரவேற்று அதனை வலியுறுத்தி இதனை பிரதம மந்திரி கவனிக்க நாம் கோரலாம். அதன் அடிப்படையிலேயே திரு மாவை சேனாதிராஜா அவர்கள் எமக்கு வாக்குறுதியளித்த அகிம்சாப் போராட்டத்தினை நாம் ஆரம்பிக்கலாம்.


அரசாங்க உத்தியோகங்களை சிரமேற்கொண்டு மதித்து வந்த அப்பட்டமான மத்தியதர வர்க்கச் சிந்தனைகளுடன் வளர்ந்த சமூகம் எங்களுடையது. போதாக்குறைக்கு கடந்;த முப்பது வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஊறி வளர்ந்த சமூகமாகவும் மாறி விட்டோம். ஆயுதப் போராட்டத்தில் ஆயுதம் வைத்திருப்பவர்களைத் தவிர மற்றெவருக்கும் வேலையில்லையே. இதனால் மக்கள் மயப்படுத்தப்பட்ட இயக்கங்கள் என்றால் என்னவென்று அறியோம். அவ்வாறான இயக்கங்கள் என்னென்ன மூலோபாயங்களுடன் இயங்கும் என்பதையும் அறியோம். இவற்றையெல்லாம் நாம் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது. அதற்கென தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் சிவில், அரசியல், வர்த்தக சமூகத்தினர் ஒன்று சேர்ந்த கூட்டிணைவுகளையும் நாம் உருவாக்க வேண்டிய நாளும் வந்து விட்டது.


இவற்றுக்கான அடித்தளங்களைப் போடாது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கட்சியுடன் முதலமைச்சர் யார் என்கின்ற போட்டியில் இறங்கி ஆட்சியாளர்களிடமே இந்தச் சண்டையில் நீதி கேட்கப் போவது அவ்வளவு ஆரோக்கியமான போக்கல்ல. தமிழ் பேசும் மக்கள் மத்தியிலான எமது பிரச்சினைகளைத் தீர்க்கும் தலைமைத்துவப் பங்கினை அவர்களுக்குத் தூக்கிக்கொடுப்பது போலல்லவா இது தென்படுகின்றது?


அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்.

 

 

(tamilglobal)
news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.