Thursday, 14th December 2017

ஏழாலை மயிலங்காடு ஸ்ரீமுருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் இனந்தெரியாத விசமிகள் கிருமிநாசினியை கலந்தமையால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களில் 26 பேர் கிருமிநாசினி கலந்த நீரை அருந்தியதால் வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.          

குறித்த பாடசாலையில் நேற்றுக் காலை வேளை பாடசாலை மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காகச் சென்றுள்ளனர். தண்ணீரில் துர்நாற்றம் வீசியதனால் சில மாணவர்கள் தண்ணீரை அருந்தவில்லை. எனினும் சில மாணவர்கள் தண்ணீர் அருந்தியுள்ளனர்.

தண்ணீர் அருந்தாத மாணவர்கள் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளனர். இவ்விடயம் உடனடியாக அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த நீர்த்தாங்கியின் மேல் ஏறிப் பார்த்த பொழுது பயிர்களுக்கு அடிக்கப்படும் கிருமி நாசினிப் போத்தல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உடனடியாக கிருமிநாசினி கலந்த நீரை அருந்திய  மாணவர்கள் 26 பேரும் தற்பாது காப்பு நடவடிக்கைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் சிலர் வைத்திய சாலைக்கு கொண்டு வரும்போது மயக்கமடைந்தனர். இதனால் நீர் அருந்திய 26 பாடசாலை மாணவர்களும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னரே அவர்கள் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர். 

இருபத்தியாறு மாணவர்களும் ஆபத்தான கட்டத்தினை தாண்டியுள்ளதாகவும் தற்போது மாணவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் ஓரிரு நாள் அவதானிப்பின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா  தெரிவித்தார்.

இந்நிலையில் குடிநீரில் கலக்கப்பட்டது ஒகனோ பொஸ்பேற் எனப்படும் கிருமிநாசினி என கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த களைநாசினி திட்டமிட்டே மாணவர்களின் குடிநீர் தாங்கியில் கலக்கப்பட்டுள்ளதாக ஊர்மக்கள் மற்றும் பாடசாலை சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. குறித்த சம்பவத்தில் கிருமிநாசினியை குடிநீரில் கலந்தவர்கள், நீர் விநியோகிக்கும் பிரதேச சபையின் மீது பழி சுமத்துவதற்காக இந்த செயலை செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளதுடன், குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளைஅடையாளம் காணுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைக்கும் சென்ற வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வியமைச்சர் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர்கள், கிராமத்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதுடன்,சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் வணக்கத் துக்குரிய சிவஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள், உப செயலாளர் சிவஸ்ரீ சுந்தரராஜ சர்மா உட்பட பலர்; சென்று பார்வையிட்டிருந்தனர்.

வடமாகாண முதலமைச்சரின் பணிப்பிற்கமைவாக மேற்படி இரு அமைச்சர்களும் வடமாகாண பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு கோரியிருப்பதுடன் முறைப்பாட்டையும் கொடுத்திருக்கின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் படை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.