Monday, 20th November 2017
Breaking News

வடக்கில் தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனும் பல்வேறு மக்களை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஒரு சம்பவம் 22/04/15  வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசசெயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அனந்தியும் கஜேந்திரனும் மற்றும் நான்கைந்துபேரும் இந்த மக்களை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.எதிர்வரும் மேமாதம் 2ம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் வடமராட்சி கிழக்கு மக்களின் கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் பயணம்மேற்கொண்டு அவர்களின் தேவைகள் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களின் கருத்துக்களை கேட்பதற்கு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்திசசிதரன் முதலமைச்சரின் பயணத்தை குழப்பும் வகையிலும் மக்களை குழப்பும் வகையிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் போன்றவர்களோடு இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் காணாமல் போனவரின் மனைவி என்ற போர்வையில் அனுதாப வாக்குகளை பெற்றுக்கொண்ட அடிப்படை அரசியல் அறிவு ஒரு துளியும் இல்லாத அரச உத்தியோகத்தரான அனந்தி தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு கட்சிக்கெதிராகவும் கட்சித்தலைமைக்கு எதிராகவும் செயற்படுவதுடன் தனது கொள்கை எதுவென்று புரியாத தடுமாற்றத்துடன் சுரேஸ் பிரேமமச்சந்திரனோடும் கஜேந்திரகுமாரோடும் சித்தார்த்தனோடும் இழுபட்டு நிற்கும் ஒருவராகவும் காணாமல் போனவர்களின் போராட்டங்களை தனது தனிப்பட்ட வக்கிரங்களுக்கு பயன்படுத்தி சம்மந்தன் சுமந்திரன் மாவை சேனாதிராசா போன்றோரின் கொடும்பாவிகளை எரிப்பதற்கு அப்பாவிகளை பயன்படுத்தி தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒருவராக வலம்வருகின்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டும் என்று மக்களை தூண்டி மறைமுகமாக மக்களை வகைதொகையின்றி கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதி ஆக்குவதற்கு சோரம்போனவராகவும் அனந்தி காணப்படுகின்றார்.

ஆனாலும் இவருடைய அடிப்படை அரசியல் தெரியாத கருத்துக்களுக்கு மக்கள் எடுபடாத நிலையில் தற்பொழுது கூப்பிடுகின்றவர்கள் பின்னால் எல்லாம் செல்லும் ஒருவராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி இருந்துவருகின்றார்.

தற்பொழுது அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆசைநோயும் தொற்றியுள்ள நிலையில் அவருக்கு தமிழரசுக்கட்சி ஒருபோதும் ஏன் இனி பிரதேசசபையிலும் கூட ஆசனம் கொடுக்காது என்பது உறுதியாகியுள்ள நிலையில் சித்தப்பிரமை பிடித்து அவரும் அவருடைய சில எடுபிடிகளும் வடமராட்சி கிழக்கில் முதலமைச்சரின் வரவை குழப்பும் வகையில் மக்களை தூண்டும் செயற்பாடுகளில் கஜேந்திரன் போன்று வக்கற்ற கூட்டங்களோடு சேர்ந்து செய்துவருகின்றார்.எனவே தமிழ்மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் தெளிவாக இருப்பது சாலச்சிறந்தது.

அனந்திவிடயத்தில் முல்லைத்தீவு கிளிநொச்சி மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.ஏனெனில் அனந்தி போராட்ட காலத்தில் என்ன செய்தார் என்பது அந்த மக்களுக்கு தெளிவாக தெரியும்.வடக்கு மாகாண சபை தேர்தலில் வேட்பாளர் தெரிவில் நடந்த பாரிய தவறுகளில் ஒன்றாகவே அனந்தியை பார்க்கமுடிகின்றது.

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.