Monday, 20th November 2017
Breaking News

அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. பள்ளி மாணவனாக இருந்த கலாம். அதிகாலையில் எழுந்து செய்தித்தாள் விநியோகிக்கும் வேலையில் ஈடுபடுவார். செய்தித்தாள்களில் வெளிவருகிற உலகப் போர் குறித்த செய்திகளைக் கவனமாகப் படிப்பார். முதலில் தினமணி நாளிதழை எடுத்து ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை வரிவிடாமல் வாசிப்பார்.

முதலாம் உலகப் போருக்குப் பின்னால் உலகில் பல நாடுகளில் விமானப்படை நிரந்தர அம்சமாகியது. போட்டிப் போட் டிக்கொண்டு ரகம்ரகமான போர் விமான ங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, ஸ்பிட்ஃபர். அந்த விமானம் பற்றி அப்போது பரபரப்பாகப் பேசிக் கொள்வார்கள். இன்றைக்கும் உலகின் மிகச்சிறந்த போர் விமானம் என்று பேசப்படும் அந்த விமானத்தின் விசிறியாக இருந்தார் கலாம். விமானவியலில் மோகம் கொண்டு கலாம் அலைந்ததற்கு ஸ்பிட்ஃபயர் விமானம் முழுமுதற் காரணம்.

போர் விமானங்களுக்கு இணையாக செய்தித்தாள்களில் இடம்பிடித்த உலகத் தலைவர்களின் புகைப்படங்களும் கலாமை உசுப்பேற்றின. கலாம் நண்பர்களிடம் சொன் னார். பார், என் பெயரும் புகைப்படமும் இதேபோல செய்தித்தாள்களில் இடம் பெறும் நாள் நிச்சயம் வரும்.

அப்துல் கலாம் பஞ்சாயத்துப் பள்ளிக் கூடத்தில் படித்து வந்தார். பள்ளியின் சிறந்த மாணவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் வீட்டில் மின்சாரம் கிடையாது. ஒருநாள் வீட்டில் மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் சத்தமாகப் பாடம் படித்துக் கொண்டிருந்தார் கலாம் இராமேஸ்வரம் திருட்டுப் பயம் இல்லாத ஊர் என்பதால் கலாம் வீட்டுக் கதவு திறந்து வைக்கப் பட்டிருந்தது. வீட்டில் அப்பா இல்லை. அம்மா தொழுகையில் இருந்தார்.

இந்தத் தாம்பூலத் தட்டை நீ வாங்கிக் கொள்’ என்றார். கலாம் ஒரு நிமிடம் யோசித்தார்.

கலாம் அந்தப் பரிசுப் பொருளை வாங்கிக் கட்டிலில் வைத்தார். வந்தவர் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்.

தாம்பூலத் தட்டில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு பாக்கெட் எல்லாம் இருந்தன. பஞ்சாயத்துத் தேர்தலில் கலாமின் தந்தை வெற்றி பெற்று பஞ்சாயத்து வாரியத் தலைவர் ஆனதால் அவருக்கு லஞ்சம் கொடுக்கவே அந்த மனிதர் கலாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இது தெரியாமல் கலாம் அவர் கொடுத்ததை வாங்கி வைத்துக்கொண்டார்.

ஜைனுல்லாபுதீன் வீட்டுக்குள் வந்த போது கலாம் நடந்ததைச் சொன்னார். அவ்வளவுதான். கலாமின் தந்தைக்குத் தறிகெட்டுக் கோபம் வந்தது. தாறுமாறாக கலாமைத் திட்ட ஆரம்பித்தார். முதுகில் ஓர் அடியும் விழுந்தது. கலாம் அழ ஆரம்பித்தார்.

கோபம் தணிந்த பின்பு கலாமை அருகில் அழைத்தார் ஜைனுல்லாபுதீன்.

இது போன்ற பரிசுப் பொருள்களைத் தருபவர்கள் ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்படுகிறவர்கள். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமை யாகிவிடக்கூடாது. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக் கொடுக் கப்படுகின்றன. இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும்’ என்று அறிவுரை செய்தார்.

குடியரசுத் தலைவர் பதவி வகித்த கலாமை அவருடைய இறுதி அலுவலக நாளன்று பல வி.ஐ.பி.க்கள் பரிசுப் பொருள்களோடு வந்து சந்தித்தனர். “என் தந்தை ஜைனுல்லாபுதீன் எனக்கு கொடுத்த அறிவுரை, ஒருபோதும் பரிசுப் பொருளை வாங்காதே. அவர் வழியில் செல்பவன் நான். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று புன்னகையுடன் பரிசுப் பொருள்களை வாங்க மறுத்துவிட்டார் கலாம்.

ஒருமுறை ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் வீட்டுக்கு கலாம் சென்ற போது அவரை உணவு உண்ண அழைத்தார் ஆசிரியர். ஆனால் தலையில் தொப்பி மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு பையனுக்கு உணவு பரிமாற முடியாது என்று மறுத்திவிட்டார் ஐயரின் மனைவி. கலாம் மனம் நோகக்கூடாது என்று அவர் முன்னிலையில் ஐயர் தன் மனை வியைக் கடிந்து கொள்ளவில்லை. கலாமை அமரவைத்து தானே பரிமாறினார். கதவு மூலையில் நின்று கொண்டு கலாம் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்த ஐயரின் மனைவி கலாமை ஈவிரக்கமின்றி அவமானப்படுத்தியதற்கு கொஞ்சங்கூட பச்சாதாபப்படவில்லை.

அடுத்த வாரம் கலாமை மீண்டும் வீட்டுக்கு அழைத்தார். சிவசுப்பரமணிய ஐயர். முகத்திலேயே தயக்கத்தைக் காட்டிய கலாமிடம், ‘நீ கட்டாயம் வருகிறாய்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பயந்துகொண்டே சென்றார் கலாம். அங்கே கலாமுக்கு உணவு பரிமாறத் தயாராக இருந்தார் ஐயரின் மனைவி.

அப்போது அறிஞர் அண்ணாவின் அலை தமிழகம் முழுக்க அடித்துக் கொண்டிருந்தது. பெரியாரை விட்டு விலகிய பிறகு அண்ணா தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து தமிழக மக்களிடையே திராவிடக் கொள்கைகளைப் பரப்பினார். தினமும் செய்தித்தாள்களில் அண்ணாவின் பேச்சைப் பற்றி அறிந்த கலாமுக்கு அண்ணாவின் பேச்சை நேரில் கேட்க வேண்டும் என்கிற பேராவல் உண்டானது. தன் நண்பர்களிடம் இதுபற்றி விவாதித்தார். நாம் எங்கே தனியாகச் சென்று அவர் பேச்சைக் கேட்க முடியும்? அவரை நம் பள்ளி விழாவுக்கு அழைப்போம். நிச்சயம் வருவார் என்று கலாமுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது.

மிகப்பெரிய தைரியம்தான். ஆனாலும் அந்த வயதில் இது ஒரு வீரதீர செயலாக இருந்தது கலாமுக்கு. யோசனை உண்டான அடுத்த நாள் கலாமும் அவர் நண்பர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறினார்கள். கூட வேறு எந்தப் பெரியவர்களையும் சேர்த்துக்கொள்ளவில்லை. பள்ளித் தலைமையசிரியருக்கும் தகவல் சொல்ல வில்லை. சென்னை வந்து இறங்கினார்கள். நாலு பேரிடம் விசாரித்து எப்படியோ அண்ணாவின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தும் விட்டார்கள்.

கை வைத்த பனியன், லுங்கி அணிந்து கொண்டிருந்த அண்ணாவின் எளிமை கலாமை மிகவும் ஈர்த்தது. வந்த விவரத்தைக் கேட்டார் அண்ணா சொன் னார்கள். இப்போது என்னால் வரமுடியாதே என்றார். உடனே கலாமுக்கும் வந்தவர்க ளுக்கும் அந்த இடத்திலேயே முகம் வாடியதைக் கண்டு நான் திருவையாருக்கு வருகிற போது கட்டாயம் உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார் அண்ணா.

இராமநாதபுரத்துக்குப் பத்திரமாகத் திரும்பிய பிறகே கலாமுக்கு உதறல் எடுத்தது. நினைத்தது போல அண்ணாவைப் பார்த்துவிட்டோம். ஒருவேளை அவர் பேச வருகிறேன் என்று தகவல் கொடுத்து விட்டால்? பயந்தது போலவே கலாமுக்குத் தகவல் வந்தது. அண்ணா பேச வருகிறார்.

வேறு வழியில்லை. இனியும் மறைக்க முடியாது. பள்ளித் தலைமையாசிரியரிடம் கலாமும் அவர் நண்பர்களும் நடந்ததைச் சொன்னார்கள் அவ்வளவுதான். தாம் தும் என்று குதிக்க ஆரம்பித்தார் தலைமையா சிரியர். என்ன செய்ய முடியும். அண்ணா வருவதாகச் சொல்லிவிட்டார் தடுக்க முடியாது.

இராமநாதபுரம் அண்ணாவை பெரும் கரகோஷத்துடன் வரவேற்றது. ஸ்வார்ட்ஜ் பள்ளியிலும் பொதுமக்கள் குவிந்தார்கள். மேடையேறினார் அண்ணா.

‘என்ன பேசவேண்டும். சொல்லுங்கள் என்றார் கம்பீரத்தோடு.

கலாமுக்குப் பதற்றம் அதிகமாகிவிட்டது. இவருக்கு நாம் என்ன ஆணையிட முடியும்?

ஆலோசனை செய்தார்கள் “நதிகள் பற்றிப் பேசுங்கள் அண்ணா”

விரல் நுனியில் தகவல்களை வைத்தி ருந்தார் அண்ணா. மனிதகுலம் தோன்றி நாள் முதல் இன்றுவரை மனிதனின் வாழ்வில் நதிகள் எத்தனை பெரிய பங்கு வகிக்கின்றன என்பதை ஒரு சொற்பொழிவாகப் பொழிந்தார்.

கலாம் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப் பட்டார். கை வலிக்க கைத்தட்டினார். ஸ்வார்ட்ஜ் பள்ளியில் கலாமின் மறக்க முடியாத அனுபவமாக அண்ணாவின் வருகையும் பேருரையும் அமைந்தன.

கலாம் குடியரசுத் தலைவராகி தன் புது இல்லமான 329 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஷ்டிரபதி பவனுக்குக் குடிபோன பிறகு நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். ராஷ்டிரபதி பவனின் வரவேற்பு அறை அரசு அலுவலகம்போல களையிழந்து கிடந்ததைக் கண்டு முதல் வேலையாக அதை அழகு செய்தார் கலாம். குழந்தைகள் கலரி ஒன்றும் வடிவமைக்கப் பட்டது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக அழகான மொஹல் பூங்காவில் மேலும் இரண்டு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று மூலைகச் செடிகள் கொண்ட பூங்காவாகவும் மற்றொன்று குழந்தைகளுக் கான பூங்காவாகவும் தயாரிக்கப்பட்டன. 127 வகையான ரோஜாக்கள் நடப்பட்டன. இந்த மாற்றங்கள் அனைத்தும் ராஷ்டிரபதி பவனுக்குத் தனியழகு கொடுத்தன.

உயிரியல் பூங்காவில் உள்ள மான்கள், மயில்கள், முயல்கள், வாத்துகள் போன்ற உயிரினங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஒரு குடியரசுத் தலைவரின் மாளிகை நந்தவனம் போன்று உள்ளது என்று அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

மொஹல் தோட்டம் கிட்டத்தட்ட கலாமின் பிரத்தியேக அறையாக மாறிப் போனது. கலாமைச் சந்திக்க வருகிற அனைவரையும் மொஹல் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று உரையாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார்.

கலாம் குடியரசுத் தலைவர் ஆன நாள் முதல் மாளிகைக்கு வருகை தருகிற மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிப் போனது. சில சமயம் தினம் 3,000 பேர், 6000 பேர் எல்லாம் சர்வ சாதாரணமாக கலாமைப் பார்த்துவிட்டுப் போயிருக்கி றார்கள். இதனால் பார்வையாளர்களை வரவேற்பதிலிருந்து அவர்களை உபசரித்து பத்திரமாக வழி அனுப்புவது வரை சவாலான வேலையாக இருந்தது. சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அது சர்வதேசப் பிரச்சினை ஆகிவிடும். ஆனாலும் பார்வையாளர்களின் வருகைக்கு கலாம் ஒருபோதும் கடிவாளம் போட்டது கிடையாது. கலாம் பதவி வகித்த 5 வருட காலமும் ராஷ்டிரபதி பவன் மக்கள் பவனாகவே இருந்தது.

குடியரசுத் தலைவர் மாளிகை முகவரி மட்டுமில்லாமல் தன் ஈமெயிலுக்கும் புகார் அனுப்பலாம் என்று கலாம் அறிவித்தது. ஒரு கட்டத்தில் சோதனையாகப் போனது. இரண்டு நாள்களில் பிரச்சினை களையப் படும் என்று உறுதிமொழி வேறு கொடுத்தார். மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்று கலாம் நினைத்ததில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் ஒரு கவுன்சிலர் செய்ய வேண்டிய வேலையை நாட்டின் முதல் குடிமகன் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தால் என்ன ஆவது?

ஆக்ராவிலிருந்து ஒரு ஈமெயில் இவ் வாறு வந்தது.

ஆங்கிள்,

எங்கள் பகுதியில் ஒரேயொரு பூங்காதான் உள்ளது. அதில் ஒரேயொரு சீசாதான் உள்ளது. அதுவும் கூட செயல்படாமல் இருக்கிறது. சீக்கிரம் நிறைய சீசாக்களை அப்பூங்காவில் நிறுவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பேபி....

சிறுமி ஒருத்தி கலாமை நம்பி இப்படி யொரு புகார் அளிக்ககலாம் ஆக்ராக லெக்டரைத் தொடர்புகொண்டு பிரச்சினை யைத் தீர்த்து வைத்தார். அடுத்த சில நாள்களில் தேங்க்பூ அங்கிள் என்று பதில் கடிதம் வந்தது.

பல்வேறு காரணங்களை முன்வைத்து தற்கொலை மிரட்டல் கடிதங்களும் கலாமுக்கு வந்தன. ஒவ்வொன்றுக்கும் பதறினார். அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். என் பணத்திலிருந்து இவர்களுக்கு உதவுகிறேன் என்றார்.

இது நாயர் உட்பட குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளுக்கு எரிச்சலைத் தந்தது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் கலாமின் வேலையா என்று முடிவு செய்து நேரடியாகவே கலாமிடம் கேட்டுவிட்டனர்.

குடியரசுத் தலைவராக நீங்கள் செய்ய வேண்டியது வேறு எவ்வளவோ இருக் கிறது. மக்கள் பிரச்சினையை மக்கள் பிரதிநிதிகள் பார்த்துக்கொள்வார்கள். மேலும் நாம் தொடர்ந்து அரசு அதிகாரிகளை நிர்ப்பந்திப்பதால் அவர்களும் இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று நம் கட்டளைகளை அலட்சியப்படுத்துகின்றனர். இனிமேல் கடிதங்களை அதன் தேவையின் அடிப்படையில் பிரித்து பதில் கொடுப்போம். நம் நேரமும் மிச்சமாகும். அநாவசியக் கடிதங்களும் நம்மை வந்து சேராது.

கலாம் அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் முக்கிய கடிதங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முக்கியமில்லாத கடிதங்களுக்கு கிடைக்கப்பெற்றோம் என்று அக்னாலேட்ஜ்மெண்ட் கடிதம் அனுப்பப்பட்டது. ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது போலிருந்தது கலாம் அதிகாரி களுக்கு.

இந்தக் கடிதங்களில் சில காதல் கடிதங்களும் கலாமுக்கு வந்தன. புகைப் படங்களை கடிதத்தோடு இணைத்து வந்த விருப்பக் கடிதங்களைப் பார்த்துவிட்டு, எப்படி என் வயதைக்கூட பொருட்டாக எண்ணாமல் இப்படியெல்லாம் கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று கலாம் ஆச்சரியப் பட்டார். இதில் உள்ள இன்னொரு ஆச்சரியம், இந்த அந்தரங்கக் கடிதங்கள் எல்லாம் அவருடைய அதிகாரிகள் முன்னால் வாசிக்கப்பட்டவைதான்.

முஷர்ரஃப் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது கலாமை அவர் மாளிகையில் சந்தித்தார். எப்படியும் கலாமிடம் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பப்போகிறார். இதைக் கலாம் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று பத்திரிகைகள் ஒருவித எதிர்பார்ப்புடன் இருந்தன.

ஆனால் கலாம் சாதுரியமாக முஷர்ரஃ பிடம் புரா திட்டம் பற்றிப் பேசினார்.

‘இந்தியாவைப் போன்று பாகிஸ் தானிலும் நிறைய கிராமங்கள் உள்ளன. அவற்றின் முன்னேற்றத்துக்கு நீங்கள் திட்டம் தீட்டும் விதமாக நாங்கள் பின் பற்றும் புராவின் மாதிரியை உங்களுக்குக் காண்பிக்கப்போகிறேன். நாகரங்களில் கிடைக்கும் வசதிகளைக் கிராமங்களுக்கும் ஏற்படுத்தித் தருவதுதான் இதன் குறிக்கோள் என்றார்.

உடனே முஷர்ரஃபுக்கு புரா திட்டத்தின் டாக்குமெண்டரி ஓடவிடப்பட்டது. கிளம்புகிறபோது முஷர்ரஃப் சொன்னார். ‘கலாம், உங்களைப் போன்ற ஒரு விஞ்ஞானியை குடியரசுத் தலைவராக அடைய இந்தியா மிகவும் கொடுத்து வைத்திருக்கிறது.’

2007 ஆம் ஆண்டு ஜுலை 24ம் திகதி கலாமின் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால் ஜுலை 16ம் திகதியே தன் அடுத்த செயல் பற்றி முடிவெடுத்துவிட்டார் கலாம்.

அன்று காலை 9 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாத னுக்கு டெல்லியிலிருந்து தொலைபேசி வந்தது. மறுமுனையில் கலாம். பரஸ்பரம் விசாரிப்புகள் முடிந்தவுடன் நேராக விஷயத்துக்கு வந்தார். “நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ மீண்டும் அதே இடத்துக்குத் திரும்ப எண்ணுகிறேன். ஜுலை 25ம் திகதி நான் சென்னை வருகிறேன். விமான நிலையத்திலிருந்து நேராக அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தான் வருகிறேன்.

உங்களுக்குச் சம்மதம்தானே” என்றார் கலாம். கலாமின் டெல்லிப் பருவம் முடிகிற தருணத்தில் இரண்டு முறை விஸ்வநாதன் டெல்லி வந்து கலாமைச் சந்தித்தார்.

“நிச்சயம் நீங்கள் மீண்டும் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வேண்டும். மாண வர்கள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.”

கலாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். அப்போது விஸ்வநாதனுக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை.

கலாமுடன் பேசி முடித்தவுடன் அண்ணா பல்கலைக்கழக முழுக்க செய்தி பரவியது. விஷயம் மீடியாவை எட்டியது. அத்தனை பேரும் விஸ்வநாதனைத் தொடர்பு கொண்டார்கள்.

கலாம் இனி தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அமர்வுப் பேராசிரி யராகப் பணியாற்றுவார் என்று முறைப்படி தகவல் சொன்னார் துணைவேந்தர். கலாமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அழைக்க விரும்பும் போது கலாம் எங்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருப்பது எங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு என்று செய்தி சேகரிக்க வந்த அத்தகைய செய்தியாளர்களிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் விஸ்வநாதன்.

முன்பைவிட இப்போது உங்களுடைய அந்தஸ்து பெரிய அளவில் உயந்துவிட்டது. மேலும் பாதுகாப்பு கருதியும் தனி பங்களா ஒதுக்குகிறோம். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கலாமிடம் விஸ்வநாதன் சொன்ன போது அவர் உடனடியாக மறுத்துவிட்டார்.

தமக்கு முதல் முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்த அறை ஒதுக்கப்பட்டதோ அதே அறையில் வசிக்க விருப்பப்படுவதாகத் தெரிவித்து விட்டார். அதே அறை, அதே வசதிகள், அதே பாதுகாப்பு, அதே உதவியாளர்கள், சமையல்காரர் என்று கலாம் விருப்பப்படி அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டன.

கலாமின் அண்ணன் பேரனுக்கு என்ஜியரிங் கல்லூரியில் படிக்க இடம் வேண்டும். ஆனால் நினைத்தவாறு கிடைக்கவில்லை. உடனே தகவல் கலாமுக்குச் சென்றது. அவர் ஏதாவது அனுகூலம் செய்வார் என்று. உடனே கலாமிடமிருந்து பதில் வந்தது.

“அவனுக்கு அந்தக் கல்லூரியில் படிக்க விருப்பம் என்றால் தன் திறமையை நிரூபித்து சேர்ந்து கொள்ளட்டும் அந்தக் தகுதி இல்லாவிட்டால் பிறகு அங்கு படிக்க அவனுக்குத் தகுதியில்லை என்று அர்த்தம்”

இறுதி நாளன்று மக்களவைக்கு அழைக்கப்பட்டார் கலாம். அன்று முழுக்க அவை கலாமின் புகழ் பாடியது. ‘இளைஞர்களின் கனவு நாயகன் நீங்கள். இலட்சக்கணக்கான பள்ளிச் சிறுவர்களை நீங்கள் சந்தித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்ததை இந்தத் தேசம் என்றுமே மறக்காது” என்றார் சோம்நாத் சட்டர்ஜி.

இறுதி முறையாக அவையில் பேசிய கலாம், ‘நான் பத்துமுறை இந்த அவையில் உரை நிகழ்த்தி இருக்கிறேன். இரண்டு பிரதமர்களிடம் பணியாற்றி அனுபவம் என்றுமே நினைவு கூரத் தக்கது. தகுந்த பாதுகாப்பும் நல்ல கல்வி வளமும் உள்ள இந்த தேசம் வாழ மிக பாதுகாப்பானது என்று நினைக்கும் போது மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்றார். இறுதி நாளன்று கலாம் கையில் இரண்டு சிறு பெட்டிகளும் ஒரு பை முழுக்க புத்தகங்களும் இருந்தன. புத்தகப் பையை உற்றுப் பார்த்தவர்களிடம் சொன்னார், ‘அவை என் சொந்த புத்தகங்கள்’

 

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.