Tuesday, 26th September 2017
Breaking News

img_3529-678x381_e408f.jpg

யாழில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான சண்டியன் திரைப்படம் இன்று சனிக்கிழமை யாழில் வெளியாகவுள்ளது எனச் சண்டியன் திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

இந்தத் திரைப்படம் இன்று  மற்றும் நாளை ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் முற்பகல்-10.30 மணி, பிற்பகல்-02.30 மணி, பிற்பகல்-06.30 மணி ஆகிய மூன்று காட்சிகளாகத் திரையிடப்படவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் ஈழத்துக் கலைஞர்களே முற்றுமுழுதாக நடித்துள்ளனர். பொதுவான கதைக்கருவை இந்தத் திரைப்படம் மையமாகக் கொண்டுள்ளது. 
இந்தத் திரைப்படம் ஏற்கனவே வெளியிடப்பட்டு வெளிநாடுகளிலுள்ள திரையரங்குகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் மக்களிடமிருந்து இந்தத் திரைப்படத்திற்குப் பெரு வரவேற்புக் கிடைத்துள்ளது.  

இந்நிலையில் யாழ்ப்பாணத்து மக்களுக்காகவும், கலைஞர்களுக்காகவும்  இந்தத் திரைப்படத்தை ராஜா திரையரங்கில் காட்சிப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். 

அனைவரும் வருகை தந்து இந்தத் திரைப்படத்தைப் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தனர். 

© 2014 Meedsi.com. All Rights Reserved.