Tuesday, 17th October 2017
Breaking News
coltoy-bomb130623338_5507100_26062017_VKK_CMY_6c9a1.jpg

சிறார்களின் விளையாட்டுப் பொருளைப்போன்ற தோற்றத்தினைக் கொண்ட குண்டொன்று வெடித்ததில் பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஆறு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் விளையாட்டுப் பொருளொன்றுடன் விளையாடிக்கொண்டிருந்தபோதே அவ்விளையாட்டுப்பொருள் வெடித்து சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆறு முதல் பன்னிரண்டு வயதுக்குமிடைப்பட்ட ஆண்பிள்ளைகளே கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் பாரிய காயங்களுக்குள்ளானதாகவும் பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு விளையாட்டுப் பொருள் வடிவில் குண்டு பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதிகளில் வெடித்தில் இது வரை, அதிகளவிலான சிறார்கள் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் சோவியத்தின் ஆக்கிரமிப்பினை எதிர்த்த ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இவ்வாறான விளையாட்டுப் பொருள் வடிவ குண்டுகள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு பாகிஸ்தானில் பழங்குடியினருக்கு பகுதியளவிலான தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஏழு பகுதிகளில் வசிரிஸ்தானும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளில் தலிபான்களுடனும், அல்காயிதாவுடனும் தொடர்புடைய போராளிக் குழுக்களுடன் பாகிஸ்தான் இராணுவம் போரிட்டு வருகின்றது. பழங்குடியினர் வாழும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் போராளிக் குழுக்களை விரட்டியடிக்கும் முகமாக இராணுவம் 2014 ஆம் ஆண்டில் தாக்குதல்களை ஆரம்பித்தது. அதில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

© 2014 Meedsi.com. All Rights Reserved.