Thursday, 14th December 2017
96767708_b5198cdc-cca5-4072-b129-f168f66be04b_4b57a.jpg

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் சமூக வலைதள பயன்பாட்டை தொடர் டிவீட்டுக்களின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.என்.பி.சி. தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருவர் குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு உள்ளானது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES”நான் சமூக ஊடகத்தைப் பயன்பயன்படுத்துவது அதிபராக அல்ல- நவீன கால அதிபராக”, என்று சனிக்கிழமையன்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், மிகா ப்ரஸென்ஸ்கி மற்றும் ஜோ ஸ்கேர்பரோ ஆகியோர் மீது, அதிபர் டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருந்தார்.

வெள்ளை மாளிகை அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினாலும், அவரின் ட்விட்டர் கருத்துக்கள் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரால் ஒரு சேர கண்டிக்கபட்டது.

டிரம்பின் உதவியாளர்கள் அவருடைய டிவீட்டுக்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.”போலி செய்திகள்” என்று டிரம்ப் தொடர்ந்து டிரம்ப் கூறிவரும் உள்ளடக்கங்களை வெளியிடும் முக்கிய ஊடகங்களை புறக்கணித்துவிட்டு மக்களுடன் நேரடியாக தம்மை இணைத்துக்கொள்ள சமூக ஊடகங்கள் உதவுவதாக அவர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

“போலியான மற்றும் பொய் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் நான் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாதென்று, குடியரசு கட்சியினரையும் பிறரையும் நம்ப வைக்க கடுமையாக உழைத்து வருகின்றன,” என்றும் “நான் 2016-இல் நடந்த அதிபர் தேர்தலில் பேட்டிகள், பேச்சுகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவே வெற்றி பெற்றேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,” என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

news english b255b
ghght35_1550c.gif
Saudi Princess Amira Bint Aidan Bin Nayef has revealed that childre...
yuhjffhge34_9def3.jpg
An Atmospheric disturbance has developed in the southwest Bay of Be...

© 2014 Meedsi.com. All Rights Reserved.