Tuesday, 26th September 2017
Breaking News
Tamil_News_large_1803247_318_219_512c4.jpg

இந்தியாவிற்கு அதி நவீன கார்டியன் ஆளில்லா விமானங்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்க வெளியுறவுதுறை உரிமம் வழங்கியுள்ளது. இந்த விமானங்கள் மூலம் இந்திய கடல்பகுதிகளை நன்கு கண்காணிக்க முடியும்.

சமீபத்தில் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசியதன் விளைவாக இந்த அனுமதி கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா ஒரு சில நெருங்கிய நட்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த விமானங்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா 22 விமானங்களை வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.இதன் விலை 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(ரூ.13,400 கோடி) என்று கூறப்படுகிறது.

சீனாவின் ஆதிக்கப்போக்கை கட்டுப்படுத்தவே இந்தியாவிற்கு இந்த விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.இது தவிர அபாச்சே தாக்குதல் ஹெலிகாப்டர்கள், சி17 ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்களையும் அமெரிக்க வழங்கவுள்ளது

© 2014 Meedsi.com. All Rights Reserved.