Tuesday, 17th October 2017
Breaking News

india_26062017_MPP_CMY_7fb27.jpg

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரஹானேவின் அபார சதத்தால் இந்திய அணி 105 ஓட்ட வித்தியாசத்தி சாதனைவெற்றிபெற்றது.

மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடத் திட்டமிட்டது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியிலேயே இரத்து செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் மழை குறுக்கிட்டது. இதனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டம் 43 ஓட்டங்களாகக் குறைக்கப்பட்டது.

நாணயற் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், களத்தடுப்பை தேர்வுசெய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரஹானே, தவான், கோஹ்லி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர்.

ரஹானே 104 பந்துகளில் 103 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 10 வுண்டரிகள், 2 சிக்சர்களும் அடங்கும். 43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ஓட்டங்களைக் குவித்தது. ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக தடவைகள் 300 ஓட்டங்களைப் பெற்ற நாடு என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியுள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா 95 தடவைகள் 300 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்தியா 96ஆவது தடவையாக இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்று சாதனையை முறியடித்துள்ளது.

311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஆவது ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்புக்கு 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

© 2014 Meedsi.com. All Rights Reserved.